fbpx

நகைப்பிரியர்களே செம குட் நியூஸ்..!! உடனே கடைக்கு கிளம்புங்க..!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!!

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 28ஆம் தேதி ஒரு பவுன் ரூ.50,000 என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. இதைத் தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6% ஆக குறைக்கப்பட்டது.

இதனால் அன்றைய தினம் சவரனுக்கு ரூ.2,080 குறைந்தது. பின்னர், தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்தது. குறிப்பாக, தீபாவளியன்று ரூ.59,640 என்ற வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. பின்னர், ஏற்ற இறக்கமாக இருந்த தங்கத்தின் விலை, நேற்று (நவ.7) அதிரடியாக குறைந்தது. அதன்படி, பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.57,600-க்கு விற்பனையானது.

இந்நிலையில், தங்கத்தின் விலையானது நேற்றைய தினம் ஒரு கிராம் 7,275 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று கிராமுக்கு 55 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, தற்போது 7,220 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அந்த வகையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.440 குறைந்து ரூ.57,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.102-க்கும், கிலோ வெள்ளி ரூ.1,000 குறைந்து ரூ.1,02,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : திடீரென தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்..!! சார்ஜ் போட்டபோது நேர்ந்த விபரீதம்..!! வாகன ஓட்டிகள் பீதி..!!

English Summary

22 carat jewelery prices fell by Rs 440 to Rs 57,760.

Chella

Next Post

இனி என்னை உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம்...! கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு...!

Mon Nov 11 , 2024
Actor Kamal Haasan has requested to call me without any epithets or titles

You May Like