தமிழக பள்ளிகளில் தற்போது 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வரும் 27ம் தேதி காலாண்டு தேர்வு முடிவடைய உள்ள நிலையில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 3ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த விடுமுறை நாட்கள் மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகவும் சனி மற்றும் ஞாயிறு ஆகியவை வார இறுதி விடுமுறை நாட்கள் ஆகவும் இருப்பதால் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை நாட்களை அதிகரித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது, அதன்படி 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அக்டோபர் 9ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் பள்ளிகள் திறப்புத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.