fbpx

கரும்பு விவசாயிகளுக்கு குட்நியூஸ்!… ஜிஎஸ்டி வரி குறைப்பு!… முழுவிவரம் இதோ!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது, பல பொருட்களின் மீதான வரி கணிசமாக குறைக்கப்பட்டது.

இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் மூத்த அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சிறுதானியங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கும் முடிவுக்கு தமிழக அரசு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். இந்த வரி குறைப்பால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், சிறுதானிய உற்பத்தி அதிகரிக்கும். அதனை உற்பத்தி செய்வோரும் பயனடைவர் என அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

இந்த கூட்டத்தில் சிறு தானியங்களின் மாவை கொண்டு பேக் செய்யப்பட்ட, லேபிள் செய்யப்பட்ட உணவுகளுக்கு தற்போது 18 சதவீத வரி விதிக்கப்பட்டு இருக்கும் வேளையில் இதை 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் சிறு தானியங்களின் மாவு பேக்கேஜ் செய்யப்படாமல் உதிரியாக (Loose package) விற்பனை செய்யப்படும் போது ஜீரோ சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது.

வெல்லப்பாகு அதாவது molasses மீதான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் மில்களில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகையை விரைவாக வழங்க உதவும் என ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது.

அதே போல் ENA எனப்படும் தூய்மையான ஆல்கஹால் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களிடமே விடப்பட்டுள்ளதாகவும், தொழில்துறை உபயோகத்திற்கான தூய்மையான ஆல்கஹால் மீது 18% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பாலியஸ்டர் ஃபிலிம் / பிளாஸ்டிக் பிலிம் மூலம் செய்யப்படும் போலியான ஜரி நூல் அல்லது நூல் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது. பார்லி-யை மால்ட்டாக பதப்படுத்துவதற்கான பணிகளுக்கு ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது.

Kokila

Next Post

கொரோனாவின் அடுத்த அலை ரெடி!... சிங்கப்பூரில் தினசரி பாதிப்பு 2000 ஆக அதிகரிப்பு!... சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Mon Oct 9 , 2023
சிங்கப்பூரில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால் கொரோனாவின் அடுத்த அலையா என மக்கள் அச்சத்தில் உள்ளனர். 2019-ல் முதன் முதலாக சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகையே ஆட்டி படைத்தது. முக கவசம், தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் அவற்றின் பாதிப்பு குறைந்தது. இதனால் பல நாடுகளில் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது. ஆனால் சிங்கப்பூரில் இதற்கு மாறாக கொரோனா தொற்று […]

You May Like