fbpx

தமிழக குட் நியூஸ்… அனைத்து பேருந்திலும் இனி டிஜிட்டல் பயணச்சீட்டு…! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!

இம்மாத இறுதிக்குள் அனைத்து பேருந்துகளிலும் பயணச்சீட்டு கருவி பயன்பாட்டுக்கு வரும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்; முதல்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திலும், விரைவு போக்குவரத்துக் கழகத்திலும் கடந்த ஆண்டு பிப்.28-ம் தேதி மின்னணு பயணச்சீட்டு கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது கருவி அறிமுகமாகி ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. இந்நிலையில், கருவி மூலம் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இதுவரை 67.80 கோடிக்கும் மேலான பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், 15.18 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணச்சீட்டுகள் டிஜிட்டல் பரிவர்த்தனையில் கீழ் வழங்கப்பட்டுள்ளன. விரைவு பேருந்துகளில் வழங்கப்பட்ட 1.60 கோடிக்கும் மேலான பயணச்சீட்டுகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணச்சீட்டுகள் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம், கும்பகோணம் கோட்டங்களில் முழுமையாக பயணச்சீட்டு கருவி அமலில் உள்ளது. சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி கோட்டங்களில் முழுமையாக மார்ச் மாத இறுதிக்குள் மின்னணு பயணச்சீட்டு கருவி பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Good news for Tamil Nadu… All buses now have digital tickets

Vignesh

Next Post

பாண்டவர்களால் ஒரே இரவில் கட்டப்பட்ட சிவன் கோயில்.. இயற்கை எழில் கொஞ்சும் அழகு..!! எங்க இருக்கு தெரியுமா..?

Mon Mar 3 , 2025
Amreshwar Mahadev Temple: A Divine Retreat Amidst Amarkantak's Green Forests

You May Like