கடந்த மாதம் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 50000 இலவச மின் இணைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை மின் வாரிய அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, இலவச மின்சாரம் கேட்டு பதிவு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு ஏற்ப 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது.
ஏற்கனவே விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின்சாரம் வழங்கி உள்ள நிலையில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நவம்பர் 11 ஆம் தேதி 20 ஆயிரம் விவசாயிகளுக்கும் மின் இணைப்பு முதலமைச்சர் தலைமையில் வழங்கப்பட்டது. தற்போது வரை 34,134 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 ஆயிரத்து 866 பேருக்கு பொங்கலுக்கு முன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்