தமிழகத்தை பொறுத்தவரை அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக அனைவருக்கும் கல்வி திட்டமம் செயல்பட்டு வருகிறது. இந்த அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலமாக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். அதேபோல் தமிழக அரசு பள்ளிகளில் மாற்றுத்திறன் மாணவர்களை பயிற்றுவிக்க தொகுப்பூதிய முறையில் சிறப்பு ஆசிரியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பகுதி நேர ஆசிரியர்கள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்திருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்பு பள்ளிகளில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர் மற்றும் தசை பயிற்சிகளுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சிறப்பு ஆசிரியர் மற்றும் தசைப்பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000இல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசைப்பயிற்சியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Read More: Wanted: ராமலிங்கம் கொலை வழக்கு…! தலா ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு தொகை அறிவித்த NIA…!