தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி நாளில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கவுள்ளன. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டை பகுதியில், 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வுக்கு செல்வதற்காக, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்.
வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லக்கூடிய அரசுப் பேருந்து, கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தேர்வுக்கு நேரமாகிவிடும் என்ற அச்சத்தில், பேருந்தை பின் தொடர்ந்து ஓடி, படியில் உள்ள கம்பியை பிடித்துக்கொண்டு, ஆபத்தான முறையில் நீண்ட நேரம் ஓடியுள்ளார். வெகு தூரம் மாணவியை ஓடவிட்ட பேருந்து ஓட்டுநர், சிறிது தூரம் சென்ற பிறகு பேருந்தை நிறுத்தியுள்ளார்.
மாணவி பேருந்துக்காக ஓடிய வீடியோ வைரலான நிலையில், அந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால், மாணவி ஓடிச்சென்று பேருந்தை பிடித்த சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் முனிராஜ் மற்றும் நடத்துனர் அசோக் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நிற்காமல் சென்ற பேருந்து | பதறி அடித்து ஓடிய பள்ளி மாணவி
— ABP Nadu (@abpnadu) March 25, 2025
வாணியம்பாடி அருகே கொத்தக்கோட்டையில் பேருந்திற்காக காத்திருந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி.
பேருந்து நிற்காமல் சென்றதால் பதறி அடித்துக்கொண்டு பேருந்தை பின் தொடர்ந்து ஓடி ஏறி, பரீட்சைக்கு சென்றார்.#Thiruppathur… pic.twitter.com/hDpslfbh3z