fbpx

பெற்றோர்களே கவனம்…! ஆரோக்கிய பானம் பட்டியலில் Bournvita நீக்கம்…! மத்திய அரசு உத்தரவு

ஆரோக்கிய பானம் பட்டியலில் போர்ன்விட்டா நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பால், தானியங்கள், மால்ட் அடிப்படையிலான பானங்களுக்கு ஆரோக்கிய பானங்கள் அல்லது ஆற்றல் பானங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த 2-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நாட்டின் உணவுச் சட்டங்களில் வகை வரையறுக்கப்படாததால், போர்ன்விடா மற்றும் பிற பானங்கள் ஆரோக்கிய பானங்கள் என அழைக்கப்படக் கூடாது என்று மத்திய அரசாங்கம் கூறியுள்ளது. அனைத்து மின்வணிக நிறுவனங்கள் மற்றும் போர்ட்டல்களும் தங்கள் தளங்கள் அல்லது போர்ட்டல்களில் இருந்து ‘ஹெல்த் டிரிங்க்ஸ்’ வகையிலிருந்து போர்ன்விடா உள்ளிட்ட பானங்களை நீக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன,” என்று வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகவும் பிரபலமான மால்ட் பானமான Cadbury Bournvita, கடந்த ஆண்டு ஒரு சமூக ஊடகங்களில் பானத்தில் அதிக சர்க்கரை அளவு இருப்பதாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியது. போர்ன்விடாவை விற்பனை செய்தால் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தவறாக வழிநடத்தும் பேக்கேஜிங், விளம்பரம் மற்றும் லேபிள்கள் அனைத்தையும் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டது.

Vignesh

Next Post

போர் கப்பல்களை களமிறக்கிய அமெரிக்கா!… 3ம் உலக போர் எச்சரிக்கையா?… கணிப்பு உண்மையாகுமோ என அச்சம்!

Mon Apr 15 , 2024
Iran – Israel war: இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் 3-ம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என இணையவாசிகள் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நாஸ்ட்ரடாம்ஸ் கணிப்பு உண்மையாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கடல் பகுதியில் […]

You May Like