fbpx

இருமொழிக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது – அமைச்சர் பொன்முடி

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2023-க்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 2,29,175. அதில் பதிவுக் கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 1,87,847. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 18,767 பேர் அதாவது 11.09 சதவீதம் பேர் அதிகம். அவ்வளவு பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 28,425 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 5,842 கூடுதலாகும். இந்த கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளுக்காக வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில் 102 பேர் 200 க்கு, 200 மதிப்பெண் எடுத்துள்ளனர். அதில், 100 மாணவர்கள் தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படித்தவர்கள்.

பொறியியல் படிப்புகளுக்காக விண்ணப்பித்திருந்த மாணவர்கள் தரவரிசை பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டு இருந்தாலும் அல்லது வேறு குறைகள் இருந்தாலும் இன்று முதல் ஐந்து நாட்களுக்குள், அதாவது 30-06-2023 க்குள் தங்கள் அருகாமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையத்தை அணுகி தங்கள் குறைகளை பதிவு செய்து நிவர்த்திக் கொள்ளலாம். பொறியியல் படிப்புகளுக்கு வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில் ஆண்கள் 1,06,384 பேர், பெண்கள் 72,558 பேர், பால்புதுமையினர் 17 பேர். தரவரிசை பட்டியலில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் தர்மபுரியைச் சேர்ந்த மாணவி மகாலட்சுமி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாணவி நிவேதிதா, கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவர் சரவணகுமார் ஆகியோர்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர வேண்டும் என்றால் கணித பாடத்தை கட்டாயம் பயின்று இருக்க வேண்டும் . AICTE  விதிமுறைகள் மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் வேண்டுமானால் பொருந்தும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் கணித பாடப்பிரிவை பயின்றிருந்தால் மட்டுமே பொறியியல் பாடப் பிரிவில் சேர முடியும்.

Maha

Next Post

கடைகளில் தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை - தமிழக அரசு

Tue Jun 27 , 2023
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலையேற்றத்தை கருத்தில் கொண்டு தக்காளியை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கனிசமாக குறைந்ததாலும், கடந்த வாரம் முதல் தக்காளி […]

You May Like