fbpx

பாலில் கலப்படம்…! 2025-ம் ஆண்டுக்குள் 87% பேருக்கு புற்றுநோய்.‌..! தீயாக பரவும் செய்தி.. உண்மை என்ன…?

பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் கலந்திருப்பதாகவும் அதனை உடனடியாக கட்டுப்படுத்தவில்லை என்றால் வரும் 2025-ம் ஆண்டுக்குள் 87% பேர் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என்று வெளிவந்த ஊடகசெய்திக்கு மத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது போன்ற போலித் தகவல்கள் நுகர்வோர் மத்தியில் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடக செய்தி வெளிவந்தவுடன், மத்திய பால்வளத்துறை அமைச்சகம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தோடு கலந்தாலோசித்தது. இது போன்ற எந்தவொரு தகவலையும் உலக சுகாதார அமைப்பு வழங்கவில்லை என்பதை இந்தியாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் அலுவலகம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மேலும் இது போன்ற போலியான தகவல்கள் சமூக ஊடகங்கள் குறிப்பாக வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருவது நம்பகத்தன்மை அற்றது.

மேலும் மத்திய அரசு, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் போன்றவைகள் இணைந்து நாடு தழுவிய அளவில் நுகர்வோருக்கு பாதுகாப்பான சிறந்த தரத்துடன் கூடிய பாலை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Vignesh

Next Post

இன்று தை முதல் வெள்ளிக்கிழமை..!! இந்த ஒரு பூஜை செய்தால் போதும்..!! அனைத்து செல்வங்களும் வீடு தேடி வரும்..!!

Fri Jan 20 , 2023
சுக்கிர யோகம் கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் எல்லா செல்வங்களும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டி போட்டுக் கொண்டு வீடு தேடி வந்துவிடும். ஆனால், அனைவருக்குமே இந்த சுக்கிர யோகம் எளிதில் கிடைத்து விடாது. சில பேருக்கு பிறப்பிலேயே இருக்கும். அழகு, அறிவு, திறமை, வீடு, வாகனம், பணம், ஆடை, ஆபரணங்கள் என்று எல்லாம் அவர்களுக்கு தேவைக்கு அதிகமாகவே கிடைத்திருக்கும். சில பேருக்கு சுக்கிர யோகம் என்பது எளிதில் கிடைக்காது. இப்படிப்பட்டவர்கள் எல்லாம் வாழ்க்கையில் […]
முன்னோர்களின் புகைப்படங்களை வீட்டில் வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

You May Like