fbpx

சூப்பர்…! மாணவர்கள் ரூ.2 லட்சம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்…! வெளியான அறிவிப்பு…

பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும்‌ பிற மாநிலங்களில்‌ உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம்‌, என்ஜடி மற்றும்‌ மத்திய பல்கலைக்கழகங்களில்‌ பட்டப்படிப்பு மற்றும்‌ பட்டமேற்படிப்பு பயிலும்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ இன மாணவ, மாணவிகளின்‌ குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல்‌ உள்ள மாணவ, மாணவியருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம்‌ ரூ.2.00 இலட்சம்‌ வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால்‌ ஆணையிடப்பட்டுள்ளது.

மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2022-23 ம்‌ கல்வியாண்டில்‌ புதியதாக விண்ணப்பிக்க விரும்பும்‌ தகுதியான மாணவர்கள்‌ கீழ்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்டுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலர்களை அணுகியோ அல்லது http://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதள முகவரியிலிருந்தும்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

மேலும்‌ மேற்படி 2022-23 ம்‌ நிதியாண்டிற்கான புதியது கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தினை மாணவர்கள்‌ பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌. கல்வி நிறுவனங்கள்‌ தங்களது சான்றொப்பத்துடன்‌ தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து கீழ்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 31.01.2023 க்குள்‌ அனுப்பி வைக்க வேண்டும்.

Vignesh

Next Post

PM Kissan: ரூ.2,000 நீங்களும் பெற முடியும்...! திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி...?

Fri Nov 25 , 2022
பிஎம் கிசான் திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி என்பதை பார்க்கலாம். பிரதமர் கிசான் யோஜனாவின் 12வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி சமிபத்தில் வெளியிட்டார். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் நிலத்தை வைத்திருக்கும் ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ.6,000 தலா ரூ 2,000 வீதம் மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது. பிஎம் கிசான் யோஜனா திட்டம் சிறு நில உரிமையாளர்களுக்கு நிதி உதவி […]

You May Like