fbpx

#Breaking : தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும்.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது..

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு அறநிலையத்துறை புதிய விதிகள் கொண்டு வரப்பட்டன.. அதன்படி 18 வயது முதல் 25 வயதுடையவர்கள் மட்டுமே அர்ச்சராக நியமிக்கலாம் என்றும், ஆகம பள்ளிகள் ஓராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது..

இந்த விதிகளை எதிர்த்து அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் நபர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் அர்ச்சகர்கள் நியமனம், இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டிருந்தது..

இதையடுத்து தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி தலைமையிலான அமர்வு விசாரித்தது.. அப்போது அர்ச்சர்கர்களை அரசே நியமித்து சட்டவிரோதமானது என்றும், அறங்காவலர்களுக்கு மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க அதிகாரம் உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது..

கோவில்களில் காலியாக உள்ள அர்ச்சகர், ஓதுவார்கள், பட்டர்கள் மற்றும் பிற பணியாளர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டுமென கடந்த ஜூன் மாதம் உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவினை பின்பற்றி, கோவில் செயல் அலுவலர்கள் மூலம் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது..

இந்நிலையில் இன்று இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.. தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.. ஆகம விதிப்படி அர்ச்சர்கர்களை நியமிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.. மேலும் எந்தெந்த கோயில்களில் எந்தெந்த ஆகம விதிகள் பின்பற்றப்படுகின்றன என்பதை கண்டறிய 5 பேர் கொண்டு குழுவை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது..

Maha

Next Post

வருமான வரித்துறையின் வரி பாக்கி நோட்டீஸால் அதிர்ந்து போன கூலித்தொழிலாளி..! எவ்வளவு தெரியுமா?

Mon Aug 22 , 2022
வருமான வரித்துறையினர் அனுப்பிய வரி பாக்கி நோட்டீஸால் தினசரி கூலித்தொழிலாளி ஒருவர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் வசிப்பவர் கிரிஷ் யாதவ். இவர் தினசரி கூலி வேலை செய்து வருமானம் ஈட்டி வருகிறார். இவருடைய ஒருநாள் வேலைக்கான கூலியே 500 ரூபாய் தான். இந்நிலையில், வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து இவரின் பெயருக்கு வந்திருக்கும் நோட்டீஸ் ஒன்று இவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது அவருக்கு வந்த […]

You May Like