fbpx

தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை அரசு கொண்டு வரவேண்டும்!… அண்ணாமலை!

தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட மும்மொழி கல்விக் கொள்கையையும் விரைவில் தமிழகத்தில் கொண்டு வரும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில், கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசின் சிபிஎஸ்இ ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, தமிழகப் பள்ளிகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பாடத்திட்டத்தைச் அறிமுகப்படுத்தியதற்காக, தமிழக அரசுக்கு பாஜக சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாடத் திட்டத்திற்காக, சிபிஎஸ்இ கல்வி ஆணையம், ஒப்பந்தம் செய்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடனேயே, தமிழக அரசும் ஒப்பந்தம் செய்திருப்பது மகிழ்ச்சி.

வரும் கல்வி ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவிருப்பதாக உத்திரப் பிரதேச மாநில அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசும் தற்போது பள்ளிப் பாடத்திட்டத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்வது பாராட்டுக்குரியது. பிரதமர் மோடி, கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை படிப்படியாக தமிழகத்தில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் தமிழக அரசு, தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட மும்மொழி கல்விக் கொள்கையையும் விரைவில் தமிழகத்தில் கொண்டு வரும் என்ற நம்பிக்கை இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

Kokila

Next Post

லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறீர்களா.? இந்த ரூல்ஸ்களை மறக்காம ஃபாலோ பண்ணுங்க.!?

Sun Jan 14 , 2024
தற்போது நடந்து வரும் அரசியல் பிரச்சினையின் காரணமாக இந்தியர்கள் பலரும் லட்சத்தீவிற்கு சுற்றுலா செல்ல விருப்பப்பட்டு வருகின்றனர். அப்படி செல்ல விரும்புபவர்கள் லட்சத்தீவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் மற்றும் அங்குள்ள நடைமுறைகள் என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம் இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவு அரபிக் கடலில் அமைந்துள்ளது. இந்தியாவின் அழகான, அமைதியான இடங்களில் ஒன்றுதான் லட்சத்தீவு. மேலும் லட்சத்தீவிலையே 36 தனித்தனி தீவுகள் உள்ளன. […]

You May Like