தமிழ்நாட்டின் பலகலைகழக வேந்தர் பொறுப்புகளில் இருந்து ஆளு நர் ஆர்.என்.ரவி விடுவிக்கப்பட்டதாக திமுக வழக்கறிஞர் வில்சன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டது, பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனங்களில் குறுக்கீடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டப்படி தவறு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டது தவறான செயலாகும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து செய்தியார்களிடம் பேசிய திமுக வழக்கறிஞர் வில்சன் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார். அவர் கூறுகையில் “தமிழ் நாட்டின் பலகலைகழக வேந்தர் பொறுப்புகளில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி விடுவிக்கப்பட்டார். தமிழக பல்கலைககங்களுக்கு வேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும்” எனவும் அவர் தெரிவித்தார்.
Read more; பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் தலைவா் தாதி ரத்தன் மோகினி 101 வயதில் காலமானார்..!!