இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள், மொத்தமுள்ள இடங்களில் 50% இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா முன்பு விசாரணைக்கு வந்தபோது, தனியார் மருத்துவக்கல்லூரி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் 50% இடங்களுக்கு அரசு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவின்கீழ் முதலில் அரசு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இரு பிரிவு மாணவர்களிடம் இரு வேறு கட்டணம் வசூலிப்பது பாரபட்சமானது. அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ரூ.18,000 கட்டணம் வசூலிக்கும் அரசு, படிப்பை முடித்தவர்கள் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய ஒப்பந்தம் செய்கிறது என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்பதால் இந்த வழக்கு விசாரணை மீண்டும் அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது .