fbpx

சூப்பர்.‌.! IAS, IPS பணிக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு…! 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணிக்கு இலவச பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு, கல்லூரிக் கல்வி இயக்ககம் மூலமாக மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகளை சென்னை இராணி மேரி கல்லூரி மற்றும் மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஆண்டுதோறும் மகளிர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடத்தி வருகின்றது.

கல்லூரிகளில் சேர வரும் 27ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு..! உயர்கல்வித்துறை அறிவிப்பு

இந்நிலையில் 2022-2023ஆம் ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதால் இராணி மேரி கல்லூரி மற்றும் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் வலைதளத்தில் 14-ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் பதிவிறக்கம் செய்து 20-ம் தேதிக்குள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுத் தேர்வு, நேர்காணல் மற்றும் பயிற்சி வகுப்புகள் தாங்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் கல்லூரியிலேயே நடைபெறும்.

விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதிகள் மற்றும் தேர்வு சம்மந்தமான விவரங்கள் அனைத்தும் விண்ணப்ப படிவத்திலும் இராணி மேரி கல்லூரி www.queenmaryscollege.edu.in ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரிக்கு www.smgacw.org என்ற இணையதளத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

குட் நியூஸ்...! மகப்பேறு பெண்கள் 10 ஆண்டு வரை PhD முடிக்க கால நிர்ணயம்...! யுஜிசி உத்தரவு

Thu Nov 17 , 2022
பெண்கள் மகப்பேறு விடுப்பு ஆகிய காரணங்களுக்காக பத்தாண்டுகள் வரை பிஎச்டி முடிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிஎச்டி படிப்பிற்கான விதிமுறைகளில் பெரும் மாற்றங்களைச் செய்துள்ளது. எம்ஃபில்களை ரத்து செய்தல், முனைவர் பட்டம் பெறுவதற்கான பாடப் பணியை தளர்த்துதல் மற்றும் நான்கு வருட பட்டப்படிப்புப் படிப்பை முடித்த பிறகு பிஎச்டிக்கு பதிவு செய்ய விண்ணப்பதாரர்களை அனுமதித்தல் போன்ற முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி 4 […]

You May Like