fbpx

அடினோவைரஸ் இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் அரசு.. குழந்தைகளுக்கு படுக்கைகள் இல்லை.. முன்னணி மருத்துவர் பகீர் தகவல்..

அடினோவை வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையை மேற்கு வங்க அரசு குறைத்து காட்டுகிறது என்று முன்னணி மருத்துவர் குற்றம்சாட்டி உள்ளார்..

மேற்கு வங்கத்தில் அடினோவைரஸ்கள் காரணமாக பல குழந்தைகள் உயிரிழந்துள்ளது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அடினோவைரஸ் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் தான் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். அடினோவைரஸ் வேகமாக பரவக்கூடிய தொற்று நோயாகும்.. மேற்குவங்கத்தில் கடந்த 11 நாட்களில் அடினோ வைரஸால் 48 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

சளி, காய்ச்சல், சுவாசப் பிரச்சனைகள், தொண்டை புண், நிமோனியா மற்றும் கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி, போன்றவை அடினோவைரஸின் பொதுவான அறிகுறிகளாகும்.. இந்த வைரஸ் தோல் தொடர்பு மூலமாகவும், இருமல் மற்றும் தும்மல் மூலமாகவும், பாதிக்கப்பட்ட நபரின் மலம் மூலமாகவும் காற்றில் பரவும். இதுவரை, வைரஸுக்கு சிகிச்சையளிக்க அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் அல்லது குறிப்பிட்ட சிகிச்சை முறை எதுவும் இல்லை.

இந்நிலையில், குழந்தைகளிடையே அடினோவைரஸ் வேகமாக பரவுவது தொடர்பாக, மேற்கு வங்க மருத்துவர் ஒருவர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார். ஹெல்த் சர்வீஸ் டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் மனாஸ் கும்தா இதுகுறித்து பேசிய போது “ அடினோவை வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையை மேற்கு வங்க அரசு குறைத்து காட்டுகிறது.” என்று குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர் “ அடினோவைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கையைப் புகாரளிப்பதில் அரசாங்கம் முழுமையாக வெளிப்படைத்தன்மையுடன் இல்லை..

அடினோவைரஸை சமாளிக்க மேற்குவங்க அரசு மேற்கொண்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை. முன்னதாக, கோவிட் காலங்களில் அரசாங்கம் தயார்நிலையில் இல்லாததால், பலர் இறந்தனர், ஆக்ஸிஜன் நெருக்கடி ஏற்பட்டது, ஆம்புலன்ஸ்கள் பற்றாக்குறை, மற்றும் மருந்துகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு (CCU) வார்டு எல்லாம் குறுகியதாக இருந்தது.. இப்போது, ​​கொரோனாவுக்கு பிறகு அடினோவைரஸ் வந்துவிட்டது.. ஆனால் அரசு கொரோனாவில் இருந்து பாடம் கற்கவில்லை.. அனைத்து குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்கவில்லை. ஒட்டுமொத்த நிலைமை இப்போது மோசமாகிவிட்டது..

அடினோவைரஸ் ஏற்கனவே 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துவிட்டனர்.. தற்போது நிலை மோசமாகிவிட்டது என்பதே இதற்கு பொருள்.. கோவிட் காலத்தில் நாம் எடுத்த அதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, சீரான இடைவெளியில் கைகளை கழுவுதல், நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடினோவைரஸை தடுக்கவும் தேவை,” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள் துப்பாக்கியை கையில் எடுத்த காவல்துறையினர்…..! சரணடைந்த முக்கிய குற்றவாளி……!

Thu Mar 9 , 2023
கோயமுத்தூர் நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரையில் 7 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், அதில் இரண்டு பேர் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்தபோது, துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர் இதனை தொடர்ந்து, கோவை மாநகரில் இருக்கின்ற ரவுடிகளை கைது செய்வதற்கு காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரையில் 50க்கும் […]

You May Like