fbpx

’ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றால் அரசு வேலை’..!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதி போட்டியான உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதலில் கோயில் காளைகள் அவிழ்க்கப்பட்டு, பின்னர் தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்க்கப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் 6,099 காளைகளும், 1,784 வீரர்களும் முன்பதிவு செய்திருந்த நிலையில், தகுதியுள்ள 1,200 காளைகள் மற்றும் 800 வீரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் வீரர் மற்றும் காளைக்கு தலா ஒரு கார் பரிசும், இரண்டாவது பரிசாக இருசக்கர வாகனமும் வழங்கப்பட இருக்கிறது. மேலும், சிறப்பாக விளையாடும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ, டிவி, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது, ”ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிக்க பல்வேறு அமைப்புகள் முயற்சி செய்தன. மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போட்டி.

ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் விதமாக, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் போன்று ஜல்லிக்கட்டு லீக் போட்டியை நடத்த பரிசீலித்து வருகிறோம். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Chella

Next Post

நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் உடன் கூட்டணி..!! டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்பு..!!

Wed Jan 17 , 2024
கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக எந்த கட்சி செயல்பாட்டாலும் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என உறுதியாக தெரிவித்திருந்தேன். விவசாயிகளை, தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் திட்டங்களையும், ஸ்டெர்லைட், மீத்தேன் போன்றவற்றையும் தமிழ்நாட்டில் மத்திய அரசு திணிக்கிறது. தற்போது தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத திட்டங்களை இங்கே திணிப்பதில்லை என நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது. அதனால் நாங்கள் கடுமையாக விமர்சிப்பதை […]

You May Like