fbpx

வாவ் சூப்பர் நியூஸ்…! வரும் 2023 முதல் வாகனங்களில் இது காட்டாயம் இருக்க வேண்டும்…! மத்திய அரசு அறிவிப்பு…!

விபத்துக்கள் நேரிடும் போது உயிரிழப்புகளைத் தடுக்க வாகனங்களில் காற்றுப் பலூன்களை கட்டாயமாக பொருத்த வேண்டும் என மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வாகனங்களில் ஓட்டுநருக்கு காற்றுப் பலூன் கட்டாயம் என 2017-ம் ஆண்டு வாகனத் தொழில் தரம் 145-ன்படி விதிமுறை விதிக்கப்பட்டிருந்தது. ஓட்டுநருக்கு பக்கத்தில் உள்ள இருக்கையிலும் இந்த காற்றுப் பலூன் அவசியம் என கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உத்தரவிடப்பட்டிருந்தது.

ஏஐஎஸ் 145, காலத்திற்கேற்றபடி அவ்வப்போது மாற்றம் செய்யப்படும் என்பதற்கு இணங்க இந்த விதிமுறையை கட்டாயமாகக் கடைப்பிடிக்க 2021 டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வெளியிடப்பட்ட புதிய அறிவிக்கையின்படி, 2022 அக்டோபர் ஒன்றாம் தேதிக்குப் பின்னர் தயாரிக்கப்படும் எம்-1 பிரிவு வாகனங்களில் பக்கவாட்டிலும் காற்றுப் பலூன்களை பொருத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பக்கவாட்டில் ஏற்படும் மோதல்களின் போது அந்த பலூன்கள் பயணிகளின் உயிரைப் பாதுகாக்கும். 4 காற்றுப் பைகள் (2 பக்க காற்றுப் பைகள் மற்றும் 2 திரைச்சீலை ஏர்பேக்குகள்) ஆகியவற்றுக்கான தோராயமான மாறி விலை ரூ. 5600 முதல் ரூ. 7000 வரை மாறுபடும்.

இந்நிலையில் வாகனங்களில் 6 ஏர்பேக் கட்டாயம் என்ற விதியை அமல்படுத்துவதை மத்திய அரசு கட்டாயமாகியுள்ளது. இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில்; கார்களில் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகள் இருக்க வேண்டும் என்ற புதிய விதி 01 அக்டோபர் 2023 முதல் பொருந்தும் என்று அவர் கூறினார். அரசாங்கம் முன்னதாக ஜனவரி 14, 2022 அன்று வரைவு அறிவிப்பை வெளியிட்டது. அக்டோபர் 1, 2022க்குப் பிறகு தயாரிக்கப்படும் வகை M1 (8 இருக்கைகள் வரை) வாகனங்களில் கட்டாயம் 6 ஏர்பேக்குகள் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Vignesh

Next Post

TNPSC குரூப்-2, குரூப்-4 தேர்வு முடிவுகள் தேதி...! அரசுப் பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு...!

Fri Sep 30 , 2022
குரூப்-2 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்திலும், குரூப்-4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்திலும் வெளியாகும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 5,529 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் 2A முதல்நிலை தேர்வு கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 11,78,163 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1,83,285 பேர் தேர்வினை எழுதவில்லை. சுமார் 9,94,878 பேர் தேர்வு எழுதினர். அதாவது 84.44% […]

You May Like