சீன இணைப்புகளுடன் கூடிய 138 ஆன்லைன் சூதாட்ட செயலி, 94 லோன் செயலியை தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் தகவல்களின் பேரில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 138 பந்தய பயன்பாடுகள் மற்றும் 94 கடன் வழங்கும் சீன செயலிகளை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாதகமான பொருள்” இருப்பதால், இந்த செயலிகள் ஐடி சட்டத்தின் பிரிவு 69 கீழ் நடவடிக்கை எடுக்க தொடங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பந்தயம் மற்றும் சூதாட்டம் சட்டவிரோதமானது என்பதால், நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பார்வையாளர்களை குறிவைத்து சூதாட்ட விளம்பரங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.