fbpx

மாநிலங்களின் செயல்திறன் தரக் குறியீடு 2.0 அறிக்கை வெளியீடு…!

இந்தியக் கல்வி அமைப்பானது 14.9 லட்சம் பள்ளிகள், 95 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு சமூக-பொருளாதார பின்னணியைக் கொண்ட சுமார் 26.5 கோடி மாணவர்களைக் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய அமைப்பாகும். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பள்ளிக் கல்வித்துறை செயல்திறனை மதிப்பிட மத்திய கல்வி அமைச்சகம் பல்வேறு குறியீடுகளைக் கணக்கில் கொண்டு செயல்திறன் தரக் குறியீட்டை(PGI) வடிவமைத்தது.

முதன்முதலில் 2017-18-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட இக்குறியீடு, 2020-21-ம் ஆண்டு வரை தொடர்ந்து வெளியிடப்பட்டது. ஆனால், இதிலுள்ள பல குறியீடுகள் தேவையற்றதாகிவிட்டதால், தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் இணைந்து மத்திய கல்வி அமைச்சகம் இக்குறியீடுகளை மாற்றியமைத்துள்ளது. இதற்கு செயல்திறன் தரக் குறியீடு 2.0 (PGI 2.0) என மறுபெயரிடப்பட்டது.

இந்தக் குறியீடு, 73 காரணிகளைக் கொண்டு மொத்தம் ஆயிரம் புள்ளிகளுக்கு மதிப்பிடப்படுகிறது. 2021-22-ம் ஆண்டுக்கான செயல்திறன் தரக் குறியீடு 2.0 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை பத்து வகைகளாக தர வரிசைப்படுத்தியுள்ளது. மொத்தமுள்ள 1000 புள்ளிகளில் 940 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாநிலங்கள், அதிக செயல்திறன் கொண்டதாகவும், 460 புள்ளிகள் வரை பெற்ற மாநிலங்கள் குறைந்த செயல்திறன் கொண்டவைகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

2021-22-ம் ஆண்டுக்கான PGI 2.0 அறிக்கையைக் காண : https://www.education.gov.in/statistics-new?shs_term_node_tid_depth=391&Apply=Apply

Vignesh

Next Post

"பம்பர்" படம் எப்படி இருக்கு? கதை என்ன??

Sat Jul 8 , 2023
பணம் சம்பாதிக்கும் பேராசையில் இருக்கும் ஒரு இளைஞனது வாழ்க்கை, ஒருவரது வருகையால் எப்படி மாறுகிறது என்பதே பம்பர்’ படத்தின் கதை. தூத்துக்குடியில் வசிக்கும் புலிப்பாண்டி (வெற்றி) சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்து வாழ்கையை ஓட்டுகிறார். பணம் இல்லாததால் தன்னை யாரும் மதிப்பதில்லை என நம்பும் அவர் எந்த வழியிலாவது பணம் சம்பாதிக்கும் வெறியில் இருக்கிறார். பெரிய சம்பவம் ஒன்றை செய்து பெரிதாக செட்டில் ஆகிவிட வேண்டும் எனக் காத்திருப்பவருக்கு, […]

You May Like