பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.10,000 வழங்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் தேர்தல் பணிக்கான வேலையை தொடங்கியுள்ளனர். ஆளும் பாஜக – சிவசேனா கூட்டணியும் தேர்தலுக்கு தயாராகும் விதமாக வாக்காளர்களை கவர, வாக்குறுதிகளை கொடுத்து வருகிறது.
அந்த வகையில் இளைஞர்களுக்கான திட்டங்களை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். ‘லாட்லா பாய் யோஜனா’ என்கிற திட்டத்தை வெளியிட்டார். இந்த திட்டத்தின்படி, 12-வது முடிந்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரமும், டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரமும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஏரளமான சலுகைகளை ஷிண்டே அரசு, பெண் வாக்காளர்களை கவரும் வகையில் ‘லாட்லி பெஹ்னா யோஜனா’ திட்டத்தை அறிவித்தது. தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை திட்டம் போல் தான் இதுவும். இதன்படி மாதம் ரூ.1,500 மகளிருக்கு வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.