fbpx

தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தி முன்னிட்டு காலை 11 மணி முதல் கிராம சபைக்கூட்டம்…! தமிழக அரசு உத்தரவு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவு. இதில் ஜல்ஜீவன் இயக்கம் உட்பட ஏழு தலைப்புகளில் விவாதிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில்‌ சபைக்கூட்டம்‌ இன்று காலை 11.00 மணி முதல்‌ நடைபெற உள்ளது. அதன் படி, அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள்‌ மற்றும்‌ ஊராட்சி செயலாளர்கள்‌ மேற்படி கிராம சபை கூட்டம்‌ நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும்‌ செய்துள்ளனர். கிராம சபை கூட்டத்தை நடத்த உதவியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும்‌ ஒரு பற்றாளரும்‌, கிராம சபை கூட்டம்‌ நடப்பதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும்‌ உதவி இயக்குநர்‌ நிலையிலும்‌, இணை இயக்குநர்‌ நிலையிலும்‌ ஒருங்கிணைப்பாளர்கள்‌ நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கிராம சபை கூட்டத்தில்‌ அனைத்து துறை அலுவலர்களும்‌, அனைத்து ஊராட்சிமன்ற உறுப்பினர்களும்‌, ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள்‌, பொதுமக்கள்‌, மகளிர்‌ சுய உதவி குழுவினர்‌ மற்றும்‌ மாற்றுத்‌ திறனாளிகள்‌ உட்பட அனைத்து தரப்பு மக்களும்‌ தவறாமல்‌ கலந்து கொள்ள வேண்டும்.

மேலும், இன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும், கூட்ட நிகழ்வுகளை நம்ம கிராம சபை செயலி Namma Grama Sabhai Mobile App” மூலம் உள்ளீடு செய்திட வேண்டும் எனவும், அது குறித்த அறிக்கையை இன்றே அளித்திடவும், கூட்டம் தொடர்பான அறிக்கையினை இவ்வியக்ககத்திக்கு 11.10.2024 க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

English Summary

Gram sabha meeting from 11 am on the occasion of Gandhi Jayanti across Tamil Nadu

Vignesh

Next Post

புதிய போர்!. இஸ்ரேலை நோக்கி 200 ஏவுகணைகளை வீசிய ஈரான்!. ராணுவத்து அதிரடி உத்தரவிட்ட ஜோ பைடன்!

Wed Oct 2 , 2024
Israel warns of 'serious consequences' after Iran fires 200 missiles

You May Like