fbpx

அரசு அதிரடி…! தமிழகம் முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டம்…! இதை எல்லாம் அவசியம் விவாதிக்க வேண்டும்…!

தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ளும் வகையில் அனைத்து கிராம ஊராட்சிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அரசு மூலம் செயல்படுத்தப்படும் அரசின் முத்தான திட்டங்களான விடியல் பயணம்- மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து சேவை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஆகியவை குறித்து பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக திட்டசெயலாக்கம், பயனாளிகள் தேர்வு விவரம், திட்டத்தின் பயன்கள் குறித்து குறும்படங்கள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காட்சிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .

கிராமசபை கூட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி குறும்பட உரையின் மூலம் இன்று துவக்கி, கிராமசபை குறித்த கருத்துக்களைத் தெரிவித்திட உள்ளார்கள். மேலும், அமைச்சர் பெருமக்கள் தொடர்புடைய மாவட்டங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

கிராமசபைக் கூட்டத்திற்கான உத்தேச பொருட்கள் அடங்கிய வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமாக கிராம ஊராட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், பொதுவான விவாதப் பொருட்களாக. ஊராட்சிகளின் நிதி நிலை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு, மழைநீர் சேரிப்பு. வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, பிரதமமந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் மற்றும் இதர பொருட்களுடன் விவாதம் நடைபெற உள்ளது.

Vignesh

Next Post

பரபரப்பு...! பிரபல கன்னட நடிகர் நாகபூஷணா பெங்களூருவில் கைது...!

Mon Oct 2 , 2023
கன்னட நடிகர் நாகபூஷணா பெங்களூருவில் சாலை விபத்தில் தம்பதிகள் மீது கார் மோதியதால் கைது செய்யப்பட்டார். கார் விபத்தில் 48 வயதான மனைவி பிரேமா உயிரிழந்த நிலையில், 58 வயதான கணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தம்பதியின் மகன் நடிகர் மீது போலீசில் புகார் அளித்ததை அடுத்து கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட காவல்துறை; பெங்களூருவில் சாலை விபத்தில் தம்பதிகள் […]

You May Like