fbpx

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்…!

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.

மத்திய, மாநில அரசு ஆணைகளின்படி இன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன்(குடிநீர்) இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், “Meri Maati, Mera Desh (என்னுடைய தாய் மண், எனது தேசம்) நிகழ்ச்சிக்காக மரக்கன்றுகள் நடுதல், ஊராட்சியில் தற்போது நடைபெறும் அனைத்து பணிகள் கனவுப்பள்ளிகள், ஊரக விளையாட்டு மைதானம், சீமைக்கருவேல மரம் அகற்றுதல், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஊராட்சியின் சிறப்பு பிரச்சனைகள் அல்லது தேவைகள் கல்வி அறிவு, பெண் கல்வியறிவு சதவீதம், ஆண், பெண் குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விபரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது.

Vignesh

Next Post

அண்ணாமலை பகீர்...! இனி "நீட் தேர்வுக்கு" இன்னொரு உயிர் போனால் அதற்கு திமுக தான் காரணம்...!

Tue Aug 15 , 2023
நீட் தேர்வை தவறாக சித்தரித்து மாணவர்களுக்கு திமுக அரசு மனச்சுமையை ஏற்படுத்துவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார் என்றும், மகன் இறந்த துக்கம் தாளாமல் அவரது தந்தை திரு செல்வசேகர் அவர்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூரில் என் மண், என் மக்கள் யாத்திரையின் பொழுது செய்தியாளர்களிடம் […]

You May Like