சேலம் அருகே மன நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பாட்டி தனது பேத்தியை கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் சூரமங்கலத்தை அடுத்த போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சார்ந்தவர்கள் விமல் குமார் மற்றும் மேகலா தம்பதியினர் இவர்களுக்கு நான்கு வயதில் மதுபிரித்திகா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதன் காரணமாக மேகலா தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இவரது தாயார் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டு, புத்தி சுவாதீனம் இல்லாமல் இருந்திருக்கிறார். தனது குழந்தையின் துணிகளை காயவைப்பதற்காக மாடிக்கு சென்றுள்ளார் மேகலா. அப்போது தனது நான்கு வயது குழந்தையின் அலறல் சத்தம் கேட்கவே பதறி அடித்து ஓடி வந்துள்ளார். அப்போது குழந்தை அதன் பாட்டியின் அறையில் இருந்திருக்கிறது. தனது தாயாரின் அரை கதவை திறக்க முயன்றுள்ளார் மேகலா. கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை கூப்பிட்டு கதவை உடைத்து பார்த்தபோது மேகலாவின் தாயார் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்திருக்கிறார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் தனது தாயிடம் இருந்து குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று இருக்கிறார். அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சென்று பரிசோதித்துப் பார்த்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் கழுத்தில் காணப்பட்ட நகக்கிரல்களை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் காவல் துறையினர் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் அந்தப் பாட்டியின் இன்னொரு மகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததிலிருந்து அப்பன் மணி புத்தி சுவாதீனம் இல்லாமல் இருப்பதாகவும் அங்கிருக்கும் ஒரு தனியார் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.