fbpx

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் அருமையான வேலை வாய்ப்பு….! இன்றே கடைசி நாள் இதை உடனே செய்யுங்கள்….!

நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும் பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றும் பல்வேறு வேலைவாய்ப்பு செய்திகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதன்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,  அந்த பல்கலைக்கழகத்தில், காலியாக இருக்கின்ற project assistant பணிக்கு ஆள் சேர்க்கை நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த பணிக்கு இரண்டு காலி பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் பணியில் சேர விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், b.sc தேர்ச்சி பெற்ற நபர்களாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு, இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு, 16000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உள்ள விண்ணப்பதாரர்கள், நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள்      https://mkuniversity.ac.in//new/notification_2023/RUSA%20ADVERTISEMENT.pdf     என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு 20,9,2023 அன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வமான மின்னஞ்சல் முகவரிக்கு, அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Next Post

கவனம்...! விநாயகர் சிலைகளை கரைக்க கட்டுப்பாடு...! தமிழ்நாடு மாசு வாரியம் முக்கிய உத்தரவு...!

Wed Sep 20 , 2023
விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. விநாயகர் சதூர்த்தி திருநாளில் வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் நீர்நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டு நெறிமுறைகளைக் கொடுத்துள்ளது. அதனை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். இயற்கையான, எளிதில் மக்கக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்கள் அதாவது களிமண். காகிதக்கூழ், இயற்கை வண்ணங்கள் போன்றவற்றை […]

You May Like