fbpx

கிரேட் நிக்கோபார் திட்டம்!. இறுதிகட்ட பணிகள் தீவிரம்!. அடுத்த சில மாதங்களில் கட்டுமானம் தொடங்கும்!

Great Nicobar Project: வங்காள விரிகுடாவில் உள்ள கிரேட் நிக்கோபார் தீவில் ரூ.41,000 கோடி மத்திப்பிலான சர்வதேச டிரான்ஸிப்மெண்ட் துறைமுக திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை இறுதிச்செய்யப்பட்டு வருகிறது. அடுத்த சில மாதங்களில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தகவலை வெளியிட்டுள்ளார்.

தி கிரேட் நிக்கோபார் தீவு(GNI) திட்டம் 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தெற்கு முனையில் செயல்படுத்தப்படும் மெகா திட்டமாகும். இது ஒரு டிரான்ஸ் ஷ்ப்மெண்ட்ஸ் துறைமுகம், ஒரு சரவதேச விமான நிலையம், டவுன்சிப் மேம்பாடு மற்றும் தீவில் 450 MVA எரிவாயு மற்றும் சூரிய சக்தி அடிப்படியிலான மின் உற்பத்தி நிலையத்தை மேம்படுத்துவதை உள்ளடக்கியது.

இலங்கையின் கொழும்பிவிலிருந்து தென்மேற்கிலும், போர்ட் கிள்ளான் (Port klang) (மலேசியா) மற்றும் சிங்கப்பூர் தென்கிழக்கிலும் ஏறக்குறைய சம தூரத்தில் உள்ள தீவின் சாதகமான நிலையை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அடையாளம் கண்ட நிதி ஆயோக் அறிக்கையின் பின்னர் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதன் முக்கியத்துவம், கூடுதல் ராணுவ படைகள், பெரிய மற்றும் அதிக போர்க்கப்பல்கள், விமானங்கள், ஏவுகணை பேட்டரிகள், மற்றும் துருப்புகளை அனுப்புவதை எளிதாக்குவதை நோக்கமாக கொண்டது இந்த திட்டம். தீவுக்கூட்டத்தை சுற்றியுள்ள முழுப்பகுதியையும் உன்னிப்பாக கண்காணிப்பது மற்றும் கிரேட் நிக்கோபாரில் வலுவான இராணுவ தடுப்பை கட்டியெழுப்புவது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு இன்றியமையாதது.

இந்தநிலையில், இந்த கிரேட் நிக்கோபார் தீவில் ரூ.41,000 கோடி மத்திப்பிலான சர்வதேச டிரான்ஸிப்மெண்ட் துறைமுக திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை இறுதிச்செய்யப்பட்டு வருகிறது. அடுத்த சில மாதங்களில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தகவலை வெளியிட்டுள்ளார்.
அதாவது, கிரேட் நிக்கோபார் டிரான்ஸ் ஷிப்மெண்ட் துறைமுக திட்டம் சுற்றுசூழல் கவலைகள் குறித்து ஆய்வுக்குட்பட்டது. இந்த திட்டம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் சுற்றுச்சுழல் அனுமதியையும் பெற்றுள்ளது. இப்போது அதை செயல்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த திட்டத்தின் டிபிஆர் இறுதிசெய்யப்பட்டுள்ளது, அடுத்த சில மாதங்களில் அதை மேலும் செயல்படுத்த உள்ளோம் என்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் செயலாளர் டி.கே. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஒரு அறிக்கையில், அரசு மற்றும் பொது – தனியார் கூட்டாண்மை சலுகையாளர்களின் முதலீடுகள் உள்ளிட்ட ரூ.41,000 கோடி முதலீட்டில் இந்த திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Readmore: பெரும் தொகை முதலீடு..!! இந்த விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்..!!

English Summary

Great Nicobar Project!. The final work is intense! Construction will begin in the next few months!

Kokila

Next Post

அயோத்தி கூட்டுப் பலாத்கார வழக்கில் கைதான மொய்த் கான்!. வகுப்புவாத மோதல்கள், நில அபகரிப்புகளில் ஈடுபட்டவர்!.

Mon Aug 5 , 2024
Ayodhya gangrape accused was charged for communal clashes, land grab in past

You May Like