fbpx

பொன்முடிக்கு Green Signal..!! மீண்டும் எம்.எல்.ஏ. பதவி..!! சட்டப்பேரவை செயலகம் முக்கிய அறிவிப்பு..!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்கில் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் பொன்முடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. பதவி கேட்டு அணுகலாம் என்று சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. மேலும், நீதிமன்றத்தை நாடியும் பொன்முடி எம்.எல்.ஏ. பதவியை பெறலாம் என தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கிடையே, சட்டப்பேரவை செயலகத்தை அணுகாமலேயே பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆகலாம் என திமுக எம்பி வில்சன் தெரிவித்துள்ளார்.

Read More : Aadhaar | மாணவர்களே இனி நீங்கள் ஈசியா ஆதார் கார்டு பெறலாம்..!! பள்ளிக்கல்வித்துறை சொன்ன குட் நியூஸ்..!!

Chella

Next Post

CAA சட்டத்திற்கு எதிராக கொந்தளித்த எஸ்டிபிஐ..!! தமிழ்நாடு முழுவதும் உஷார்படுத்தப்படும் போலீஸ்..!!

Tue Mar 12 , 2024
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக எஸ்டிபிஐ கட்சி போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. 2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், சிஏஏ சட்ட அறிவிக்கையை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிஏஏ சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. கொரோனா தொற்று காரணமாக போராட்டங்கள் ஓய்ந்திருந்தன. சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் […]

You May Like