fbpx

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாள் மட்டும்…! மிஸ் பண்ணிடாதீங்க…

தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர்‌ அலுவலகங்களிலும்‌ வருகின்ற நாளை பொது விநியோகத்‌ திட்டம்‌ தொடர்பான குறைதீர்‌ முகாம்‌ நடைபெறவுள்ளது.

பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ சேவைகளை அனைத்து தரப்பு மக்கள்‌ பயன்‌ பெறும்‌ பொருட்டு, ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும்‌ பொது விநியோகத்திட்ட மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை 2023 மாதம்‌ இரண்டாவது சனிக்கிழமை நாளை ஒவ்வொரு வட்டாட்சியர்‌ அலுவலகத்திலும்‌ நடைபெறும்‌ பொது விநியோகத்திட்ட குறைதீர்‌ முகாமில்‌ பொதுமக்கள்‌ பொது விநியோகத்திட்டம்‌ தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல்‌ அலுவலரிடம்‌ நேரில்‌ தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்‌.

இக்குறைதீர்‌ முகாமில்‌, குடும்ப அட்டைகளில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, பெயர்‌ நீக்கம்‌, முகவரிமாற்றம்‌ மற்றும்‌ புதிய குடும்ப அட்டை / நகல்‌ அட்டை கோரும்‌ மனுக்கள்‌ பெற்று உடனடிநடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. மேலும்‌, கைபேசி எண்‌ பதிவு மற்றும்‌ கைப்பேசி எண்‌ மாற்றம்‌ செய்தலுக்கான மனு பெற்று உடன்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. பொது விநியோக கடைகளின்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ அத்தியாவசியப்‌ பொருட்களின்‌ தரம்‌ குறித்த புகார்கள்‌ இருப்பின்‌ அதன்பேரில்‌ உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

Vignesh

Next Post

பரபரப்பு...! ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை...? இன்று தீர்ப்பு வழங்குகிறது குஜராத் உயர் நீதிமன்றம்...!

Fri Jul 7 , 2023
அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் வழக்கில், இன்று தீர்ப்பு வழங்குகிறது குஜராத் உயர்நீதிமன்றம். மோடி என்னும் சமூகத்தையே இழிவுபடுத்தியதாக கூறி தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் விதிக்கப்பட்ட 2 […]

You May Like