பெண்களின் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் Work From Home கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”இன்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தினம். பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்க ஆந்திரா முனைப்பாக உள்ளது” என்று முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், “வேலை வீட்டில் செய்தல், ஹைப்ரிட் மாதிரிகள் போன்றவை பெண்களின் பங்களிப்பை பெரிதும் அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த கொள்கை, பெண்கள் தொலைவில் இருந்தும் கூட இஷ்டப்படியான வேலை நேரத்தை வழங்கி, வேலைவாய்ப்பு விகிதத்தை உயர்த்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதை “வேலை-வாழ்க்கை சமநிலைக்கு ஒரு புதிய சகாப்தம்” என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில், வீட்டிலிருந்து வேலை செய்வது சாத்தியமாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இது எப்படி செயல்படுத்தப்படும் என்பது இப்போதைக்கு தெரிவிக்கப்படவில்லை.
Work From Home – பலன்களும், பரிதாபங்களும்
கொரோனா காலத்தில், உலகெங்கிலும் Work From Home முறை கொண்டுவரப்பட்டது. அலுவலகங்களுக்குச் சென்று வேலை செய்த ஊழியர்கள், தங்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றி வந்தனர். ஆனால், இந்த Work From Home முறை, பல புதிய அனுபவங்களையும், சவால்களையும் உருவாக்கியது. ஆரம்பத்தில், வீட்டிலிருந்து வேலை செய்வது வசதியாகவும், பயண நேரம் மிச்சப்படுத்துவதாகவும் பலரும் உணர்ந்தனர்.
ஆதேபோல், குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவும், வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டையும் சமநிலைப்படுத்தவும் Work From Home பெரும் உதவியாக இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியும், இணைய வசதிகளும் வீட்டிலிருந்து வேலை செய்ய ஏதுவான சூழலை உருவாக்கின. ஆனால், இம்முறை சில சிக்கல்களையும் கொண்டுள்ளது. வீட்டில் வேலை செய்யும் போது, வேலை நேரம் மற்றும் ஓய்வு நேரம் பிரிப்பது கடினமாக இருக்கும்.
சிலருக்கு வீட்டில் அமைதியான சூழல் கிடைக்காது. குறிப்பாக குழந்தைகள் உள்ள குடும்பங்களில், வேலை செய்வது கடினமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நேரடியாகப் பழகும் வாய்ப்பு இல்லாமல் போனதால், தனிமை உணர்வு சிலரை வாட்டி வதைத்தது. இருப்பினும், கொரோனா தொற்றுக்குப் பிறகும், பல நிறுவனங்கள் Work From Home முறையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றன. இது ஊழியர்களுக்கு வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை மேம்படுத்த உதவுகிறது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
Read More : ’தவெகவில் இருப்பதே குழந்தைகள் மட்டும்தானே’..!! சட்டத்தை மீறுகிறாரா விஜய்..? பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை..!!