fbpx

வெளியானது குரூப் 1 தேர்வு முடிவுகள்..! செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் முதலிடம்..!

66 பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா மாநில அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

தமிழ்நாடு அரசில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட குரூப் 1 பணியிடங்களில் காலியாக உள்ள 66 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2021 ஜனவரி 3ஆம் தேதி நடைபெற்றது. முதல்நிலைத் தேர்வு முடிவுகள் கடந்த 2021 டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகின. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த மார்ச் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முதன்மைத் தேர்வை 3,800 பேர் எழுதிய நிலையில், அதில் 137 பேர் மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

வெளியானது குரூப் 1 தேர்வு முடிவுகள்..! செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் முதலிடம்..!
கோப்புப் படம்

137 பேருக்கும் கடந்த 3 தினங்களாக நேர்காணல் நடைபெற்று வந்த நிலையில், தற்போது தகுதியானவர்களின் விவரங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. நேர்காணலில் பங்கேற்ற 137 நபர்களின் விவரங்களும் https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. முதன்மைத் தேர்வு மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் ஒன்றாக கணக்கிடப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் இட ஒதுக்கீடு அடிப்படையில் தகுதியான நபர்கள் 66 பணியிடங்களுக்கும் தேர்வாக உள்ளனர். முதன்முறையாக இந்த தேர்வு முடிவுகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமையும் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

குழந்தைகளின் கண் முன்னே மனைவியை துண்டு துண்டாக வெட்டி... அச்சத்தில் குழந்தைகள்...!

Fri Jul 15 , 2022
கராச்சியில் உள்ள ஒரு மூடியிருந்த தனியார் பள்ளியில், ஆஷிக் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆஷிக் அவரது மனைவி நர்கீஸ் மற்றும் அவரது ஆறு குழந்தைகளுடன் கடந்த ஒன்பது மாதங்களாக மூடப்பட்டிருந்த அந்த தனியார் பள்ளியில் தங்கி இருந்துள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன்பாக ஆசிக், நர்கீஸ் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சன்டையில் ஆத்திரமடைந்த ஆஷிக்,  தலையணை வைத்து நர்கீஷின் முகத்தில் அழுத்தி உள்ளார்.  இதனால் மூச்சு திணறி […]

You May Like