fbpx

குரூப் 4 தேர்வு முடிவு சர்ச்சை..!! இன்று முக்கிய ஆலோசனை..!! முக்கிய அறிவிப்பு வெளியாகுமா..?

கடந்த வாரம் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. சரியாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவில்லை என்றும், தேர்வெழுதிய பல லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் வரவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. தமிழ் தேர்வில் தோல்வி காரணமாக 5 லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. முறைகேடுகள் காரணமாக குறிப்பிட்ட சில மையங்களில் அதிகம் பேர் தேர்வு பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குரூப் 4 விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. தற்காலிக தலைவர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அலுவலர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

இந்து முன்னணி நிர்வாகி அதிரடி கைது…..! கோவையில் பரபரப்பு நடந்தது என்ன….?

Wed Mar 29 , 2023
கோவையில் சமீப காலமாக பெட்ரோல் குண்டு வீச்சு, கார் குண்டுவெடிப்பு என்று பல்வேறு விரும்பத்தகாத செயல்கள் நடைபெற தொடங்கி இருக்கின்றன. இதன் காரணமாக, மாவட்ட காவல்துறை அவ்வப்போது ஆங்காங்கே அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த விதத்தில் கோவை மாவட்டம் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த அயோத்தி ராய்வி என்ற நபர் வீட்டில் கை துப்பாக்கிகள் இருப்பதாகவும் அவற்றை அவர் சட்ட விரோதமாக வைத்திருக்கிறார் என்றும் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. […]

You May Like