ஆகஸ்ட் 2023-ல் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ. 1,59,069 கோடியாக உள்ளது.
2023 ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரி வருவாய் ரூ. 1,59,069 கோடியாக இருந்தது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 28,328 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ. 35,794 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 83,251 கோடியாகவும் இருந்தது. 2023 ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தின் ஜிஎஸ்டி வருவாயை விட 11 சதவீதம் அதிகமாகும்.
ஆகஸ்ட் மாதத்தில், பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த வருவாய், 3 சதவீதம் அதிகமாகவும், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் கிடைக்கும் வருவாய் (சேவைகள் இறக்குமதி உட்பட) கடந்த ஆண்டு இதே மாதத்தில் கிடைத்த வருவாயை விட, 14 சதவீதம் அதிகமாகவும் இருந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 8,386 கோடியும் இந்த ஆண்டில் ரூ. 9475 கோடியும் வரி வருவாய் ஈட்டப்பட்டது. இது 13 சதவீதம் அதிகமாகும்.