பல் வலிக்கு கொய்யா இலை சிறந்த நிவாரணம் தரும். கொய்யா இலையில் டாக்டர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது பல் வலியை நீக்க உதவுகிறது. இதனை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் அந்த நீரினால் வாய் கொப்பளிக்கலாம்.
பொதுவாக பல் வலியை தாங்கிக்கொள்வது சற்று கடினமாக தான் இருக்கும். ஏனெனில் பல்வலி உடன் கண், காது மற்றும் தலைவலியும் ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு பல் வலி அடிக்கடி ஏற்படுவது உண்டு. இதனால் அதிலிருந்து விடுபட வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் தொடர்ந்து எடுத்துக் கொள்வது நல்லதல்ல. இந்நிலையில் சில வீட்டு வைத்தியம் பயன்படுத்துவதன் மூலம் பல் வலியில் இருந்து விடுபடலாம்.உப்பு தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிப்பது தொண்டை வலிக்கு மட்டுமின்றி பல் வலிக்கும் சிறந்தது. இது ஒரு இயற்கை கிருமி நாசினியாகும். மேலும் பற்களின் இடையே ஏதாவது உணவு துகள்கள் சிக்கி இருந்தால் அல்லது வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெதுவெதுப்பான தண்ணீரில் அரை டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கலாம்.
பூண்டு பல் வலியை சரி செய்வதில் சிறந்தது. பூண்டு அரைத்து பேஸ்ட் போல் செய்து அதை வழி உள்ள பற்கள் அல்லது ஈறுகள் மீது தடவவும். இவ்வாறு செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், அதற்கு பதிலாக பச்சை பூண்டை சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடும் போது பூண்டின் சாறு, வலி உள்ள இடத்தில் படும்படி மெதுவாக சாப்பிடவும்.கிராம்பு அல்லது அதன் எண்ணெய் பல் வலியை நீக்க உதவும். வலி உள்ள பற்களுக்கு இடையே கிராம்பு வைத்து கடிக்கலாம் அல்லது ஒரு சில துளி கிராம்பு எண்ணெயை பஞ்சில் நனைத்து வலி உள்ள பற்களின் மீது வைக்கலாம்.