நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் 2022-2023 ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் தாம் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில்உயர்கல்வி படிப்புகள் தொடர வேண்டுமென்கின்ற நோக்கில் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குவதற்காக நான் முதல்வன் -‘உயர்வுக்குபடி’ என்ற முகாமானது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் இன்று நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில்1,493 மாணவர்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறஉள்ளது.
இம்முகாமானது வருவாய்த்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் அலுவலகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சமூகநலம் மற்றும் மகளிர்உரிமைத்துறை, முன்னோடி வங்கி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்டகுழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் நலத்துறை, உயர்கல்வித் துறைபள்ளிக்கல்விதுறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து நடைபெற உள்ளது.
மேலும் இந்த முகாமில் தனியார் கல்லூரிகளும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். எனவே மாணவர்கள் தங்கள் உயர் கல்விக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் பெறுவதற்கு இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.