fbpx

கின்னஸ் உலக சாதனை படைத்த மாடு..!! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?

உலகின் மிக உயரமான காளையாக ஹோல்ஸ்டீன் ஸ்டீர் (Holstein Steer) இனமான ரோமியோ, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

`ஸ்டீர்’ என்பது அமெரிக்கா போன்ற நாடுகளில் கருத்தடை செய்யப்பட்டு, மாட்டிறைச்சிக்காக வளர்க்கப்படும் காளையைக் குறிக்கிறது. பிறந்து 10 நாட்களே ஆன நிலையில், ஒரு பால் பண்ணையில் ரோமியாவை வெட்ட முயன்றுள்ளனர். அங்கிருந்து மீட்கப்பட்ட நிலையில், ஓரிகானில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் ரோமியோ வளர்க்கப்பட்டது. இதன் பாசமிகு குணத்திற்காக ரோமியோ என்று பெயரிடப்பட்டது.

இந்தக் காளை ஆப்பிள் மற்றும் வாழைப்பழங்களை விரும்பி சாப்பிடுகிறது. ஒவ்வொரு நாளும் 100 பவுண்டுகள் (45 கிலோ) வைக்கோலையும் கூடுதலாக தானியங்களையும் சாப்பிடுகிறது. அதன் உயரத்திற்கு ஏற்ப தங்குமிடங்களும் உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோமியோவை அவரது உரிமையாளரான மிஸ்டி மூர் ஒரு `மென்மையான ராட்சதர்’ என்று கூறுகிறார்.

கின்னஸ் உலக சாதனையின் எக்ஸ் தள பக்கத்தில், ரோமியோவின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், ”1.94 மீட்டர் (6 அடி 4.5 அங்குலம்) உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான காளையான ரோமியோவை பாருங்கள். ரோமியோ வெல்கம் ஹோம் அனிமல் சரணாலயத்தில் தனது வளர்ப்பாளரான மிஸ்டி மூருடன் வசிக்கும் 6 வயது ஹோல்ஸ்டீன் ஸ்டீயராகும்” என்று குறிப்பிட்டுள்ளது. வழக்கமாக மாடுகளின் உயரம் 4 முதல் நாலரை அடி வரைதான் இருக்கும். இந்தக் காளை 6 அடி உயரத்துக்கு மேல் இருப்பதால் தற்போது வைரலாகி வருகிறது.

Read More : படுதோல்வியடைந்த ’சாமானியன்’..!! ’இனி ஹீரோவாக எடுபடாது’..!! அதிரடி முடிவெடித்த ராமராஜன்..!!

English Summary

Romeo, a Holstein Steer, holds the Guinness World Record for being the world’s tallest bull.

Chella

Next Post

மக்களே உஷார்..!! ஆவினில் காலாவதியான பிஸ்கட் விற்பனை..!! ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்..!!

Wed May 29 , 2024
Expired packets of biscuits sent for sale from Erode Aavin have come as a shock.

You May Like