பிரதமர் மோடி குஜராத் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்தார் , அப்போது அங்கு குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேலுக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் பரவி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.
விரைவில் குஜராத் மாநிலத்தில் சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பல நலத்திட்ட உதவிகளையும் அவர் அறிவித்து வருகின்றார். இத்தகைய நிலையில், குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் பிரதமர் நரேந்திர மோடியின் காரில் ஏறுவதற்கு முயற்சித்துள்ளார்.
அப்போது கார் அவரை ஏற்றாமல் உடனடியாக புறப்பட்டுவிட்டது. மேலும் அவரை தேசிய பாதுகாப்பு படை வீரர் குஜராத் முதல்வரை தடுத்து நிறுத்தினார். இதனை தொடர்ந்து, குஜராத் முதல்வர் பாதுகாப்பு வீரர்களுடன் சேர்ந்து நடந்து சென்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
இச்சம்பவத்தை பற்றிய வீடியோவை பாரத் ராஷ்டிரிய சமிதி ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.