செங்கல்பட்டு அருகே காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி தனிகாவை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
திருவள்ளுரை சேர்ந்தவர் ரவுடி தனிகா. இவர் மீது திருவள்ளூர் மட்டும் செங்கல்பட்டு காவல் நிலையங்களில் கொலை கொள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. வழிப்பறி வழக்கில் சிக்கிய அவர்மீது விசாரணை தொடர்ந்து வந்தது. இரண்டு நாட்களாக விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அவரை கைது செய்து அழைத்து வர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனைத்தொடர்ந்து சென்னையில் பதுங்கியிருந்த ரவுடி தனிகாவை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். இரவு 11 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பகுதியில் சென்றபோது காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரௌடி தனிகா, ஜீப்பில் இருந்து வெளியே குதித்து ஓடியுள்ளார். தப்பிசெல்ல முயன்ற ரவுடி தனிகாவை செங்கல்பட்டு ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி தணிகாவிற்கு வலது கால் மற்றும் கையில் குண்டு காயங்கள் ஏற்பட்டன, இதனையடுத்து சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.