fbpx

7 பேருக்கு ஒரே நாளில் தூக்கு.. குவைத் நாட்டிற்கு குவியும் கண்டனம்.!

குவைத் நாட்டில் ஒரே நாளில் ஏழு பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஐரோப்பிய நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்து இருக்கின்றன.

ஒரே நாளில் குவைத் நாட்டில் 7 நபர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. இதுகுறித்து, அந்நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, பல்வேறு குற்றங்களுக்காக இந்த தூக்கு தண்டனையானது அளிக்கப்பட்டது என்றும், தூக்கு தண்டனை கொடுக்கப்பட்ட ஏழு நபர்களில் இரு பெண்களும் இருந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், 7 பேர்களில் குவைத் நாட்டைச் சேர்ந்த மூன்று ஆண்களும், குவைத் பெண் ஒருவரும், சிரியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவரும் இரண்டு நபர்களும் மற்றும் ஒரு எத்தியோப்பிய பெண் ஆகியோரும் இருந்தனர்.

உயிர் வாழும் உரிமையை மற்றவர்களிடமிருந்து இந்த ஏழு நபர்களும் பறித்ததாகவும், இதனால் அவர்களுக்கு இந்த தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டதாகவும் குவைத் நீதித்துறை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு, ஐரோப்பிய யூனியன் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.

Baskar

Next Post

விவசாயியின் உயிரை காப்பாற்றிய இளைஞரின் இதயம்.!

Fri Nov 18 , 2022
சேலம் மாவட்ட பகுதியை சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க விவசாயிக்கு கடந்த 7 ஆண்டுகளாக விரிந்த கார்டியோமயோபதி இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், கடுமையான வென்ட்ரிகுலர் செயலிழந்துள்ளது. இதனையடுத்து, இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுரை மாவட்ட பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர், சென்ற 14ம் தேதி சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்துள்ளார். மேலும், அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த, நிலையில் […]

You May Like