fbpx

ஜிம்முக்கு செல்லும் பெண்களே உஷார்..!! கள்ளக்காதலியுடன் கூட்டு சேர்ந்து உல்லாசம்..!! வீடியோ எடுத்து மிரட்டல்..!! சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையில் ஜிம்முக்கு வரும் பெண்களை மாய வலையில் விழவைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த கள்ளக்காதல் தம்பதியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், அய்யாப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 33). அதே பகுதியை சேர்ந்தவர் நித்தியா (33). இருவரும் சேர்ந்து நியோ பிட்னெஸ் ஜிம் எனும் உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வருகின்றனர். இதில், திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மின் ஆக பணியாற்றும் 35 வயது பெண் ஒருவர் உடல் பருமனை குறைக்க கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஜிம்மில் உறுப்பினராக சேர்ந்துள்ளார். தினமும் ஜிம்முக்கு வந்து சென்றபோது ஜிம் மாஸ்டருக்கும், அப்பெண்ணுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி ஜிம்மில் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், சிவக்குமார் மற்றும் உடல் பருமனை குறைக்க வந்த பெண் இருவரும் ஜிம்மில் உல்லாசமாக இருந்ததை சிவகுமாரின் தோழி நித்தியா என்பவர் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இதற்கிடையே, ஜிம் மாஸ்டருக்கும், அவரது தோழி நித்யாவுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவுமுறை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், நித்தியா இந்த வீடியோக்களை காட்டி அப்பெண்ணிடம் மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இதுகுறித்து அப்பெண் ஜிம் மாஸ்டர் சிவகுமாரிடம் கூறியுள்ளார். அதற்கு சிவகுமார் அப்பெண் கேட்கும் பணத்தை கொடுத்துவிடு இல்லை என்றால் அசிங்கமாகிவிடும் என தெரிவித்துள்ளார். இதே போன்று பலமுறை மிரட்டி பல லட்ச ரூபாய் பறித்ததாக கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாது திகைத்த அப்பெண், நடந்ததை தனது கணவரிடம் கூறியுள்ளார்.

இது குறித்து அவரது கணவர் திருமுல்லைவாயல் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜிம் மாஸ்டர் சிவகுமார் மற்றும் அவரது கள்ளக்காதலி நித்தியா ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே, உடல் பருமனை குறைக்க வந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து ஜிம் மாஸ்டர் மற்றும் அவரது கள்ளக்காதலி இருவருமே கூட்டாக சேர்ந்து பணம் பறித்து வந்தது தெரியவந்தது. இவர்கள் இருவரும் இது போன்று ஜிம்முக்கு வரும் பெண்களை குறிவைத்து பணம் பறிப்பில் ஈடுபட்டர்களா என்பது குறித்தும், யார் யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்தும் மகளிர் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Read More : உடலுறவை இப்படி செய்தால் இவ்வளவு பெரிய ஆச்சர்யம் நடக்குமா..? நீங்களும் இதை டிரை பண்ணுங்க..!!

English Summary

Police are on the hunt for an extortionist couple who lured gym-goers in Chennai and extorted money from them.

Chella

Next Post

வாகன ஓட்டிகளே..!! இது உங்களுக்கு தெரியுமா..? 50 லிட்டர் பெட்ரோலை இலவசமாக பெறலாம்..!! எப்படி தெரியுமா..?

Wed Jun 12 , 2024
With the price of petrol being above Rs 100, 50 liters of petrol can be bought for free throughout the year. Let's find out how in this post.

You May Like