நான் என்ன தம்பி அண்ணாமலையா? என திருப்பத்தூரில் நடந்த நாம் தமிழர் கூட்டத்தில் பேசிய சீமான் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து சீமான் பேசுகையில், நான் முதல்வன் – அய்யா ஸ்டாலின் காலை உணவு திட்டத்தில் உப்புமா கொடுக்கிறார். அதை நீங்கள் எடுத்து சாப்பிட்டால் உங்கள் உடம்புக்கு ஒட்டுமா? திமுக ஒரு உப்புமா கம்பெனி. முதலமைச்சர் காலை 9 மணிக்கு வருகிறார் என்றால் சாலையில் காலை 6 மணி முதலே போலீஸ் பந்தோபஸ்துக்கு நிற்கின்றனர்.
அவர்களால் இயற்கை உபாதைகளை கூட கழிக்க இயலாத சூழல் நிலவுகிறது. இது மாதிரி உலகில் ஒரு மனித வதை, கொடுமை இருக்கிறதா? சொந்த நாட்டில் நடமாட எதுக்கு இத்தனை பாதுகாப்பு. நான் பாருங்கள் இத்தனை ஆயிரம் பேருக்கு நடுவில் பேசுகிறேன். எனக்கு என்ன பிரச்சனை? நான் என்ன என் தம்பி அண்ணாமலையா, இசட் பிரிவு ஒய் பிரிவு பாதுகாப்பெல்லாம் வச்சிக்கிட்டு போறதுக்கு? நான்தான் இந்த நாட்டுக்கே பாதுகாப்பு எனக்கெதுக்கு பாதுகாப்பு?
கல்லுக்கடை இல்லை, பனம்பால், தென்னம்பால் மூலிகை சாறு கடைகளை திறப்போம். வீரப்பன் இருந்த போது காட்டுக்குள் மரங்கள் பாதுகாப்பாக இருந்தன. வீரப்பன் இருந்திருந்தால் காவிரி பிரச்சனை வந்திருக்குமா என யோசித்து பாருங்கள். நாகப்பாவை கடத்தியவருக்கு நயன்தாராவை கடத்த தெரியாதா, அதுதான் தமிழன் மாண்பு என சீமான் தெரிவித்தார்.