fbpx

இன்று திறனாய்வுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு…! பதிவிறக்க என்ன செய்ய வேண்டும்…? முழு விவரம்

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 07.10.2023 அன்று நடைபெறவுள்ளது.

இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 07.10.2023 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வு எழுதவுள்ள மாணாக்கர்களின் “பெயர் பட்டியலுடன் கூடிய வருகைத்தாட்கள்” (Nomminal Roll -Cum – Attendance Sheet) தேர்வு மைய வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு மையமாகச் செயல்படும் பள்ளியின் User Id / Password -ஐ பயன்படுத்தி இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே, தங்கள் எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் பெயர் பட்டியலினை தவறாமல் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்த வேண்டும். முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறும் இரு தேர்வுகளுக்கும் ஒரே பெயர் பட்டியலைப் பயன்படுத்த வேண்டும்.

தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல்

மேற்படி தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இன்று பிற்பகல் முதல் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களது பள்ளிகளுக்குரிய User Id / Password -ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ள உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணாக்கர்களுக்கு பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளையும், தேர்வு விவரத்தினையும் சம்பந்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தெரிவித்திட உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.

தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளில் மாணவரின் பெயர் / பிறந்ததேதி, இனம் ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின், சிவப்பு நிற மையினால் பிழையினை சுழித்து சரியான திருத்தப் பதிவினை மேற்கொள்ள வேண்டும். புகைப்படத்தில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் தேர்வரின் புதிய புகைப் படத்தை உரிய இடத்தில் ஒட்டி சம்பந்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சான்றொப்பமிட்டு (பள்ளி முத்திரையுடன்) தேர்வர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், ஒரு புகைப்படத்தை சம்பந்தப்பட்ட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மக்களே எச்சரிக்கையாக இருங்க...! நீலகிரி, தேனி உள்ளிட்ட 4 மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை...!

Wed Sep 27 , 2023
நீலகிரி, தேனி உள்ளிட்ட 4 மாவட்டத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் […]

You May Like