நாளை மறுநாள் இந்திய நாட்டின் 76வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடுகளை தீவிர படுத்தியிருக்கிறது. காவல்துறையினரும், ராணுவத்தினரும் ஒருபுறம் அணிவகுப்பு ஒத்திகையை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி இது தொடர்பாக தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்து இருப்பதாவது, சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஹர்கர் திரங்கா இயக்கத்திற்காக சமூக வலைதளங்களில், பொதுமக்கள் தங்களுடைய முகப்பு படத்தை மாற்ற வேண்டும். நம்முடைய நாட்டிற்கும், நமக்கும் இருக்கின்ற ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில், இந்த தனித்துவமான முயற்சிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று பதிவிட்டு இருக்கிறார்.