fbpx

தீபாவளிக்கு பட்டாசு.. ரயிலில் மட்டும் கொண்டு வந்துடாதீங்க.. மீறினால் கடும் தண்டனை!! – ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை

வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இப்பண்டிகை திருநாளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் முதல் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வர். இதையொட்டி பல நகரங்களில் தெருவோர பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு பட்டாசு விற்பனை கோலாகலமாக நடந்து வருகிறது.

கிராமங்களில் இருந்து வந்து நகரங்களில் தங்கி வேலை செய்து வரும் மக்கள் தீபாவளிக்கு அவரவர் ஊர்களுக்கு செல்வது வழக்கம். மேலும் நகரங்களில் வசிப்பவர்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று பட்டாசுகளை ரயில் மூலமாகவோ அல்லது பஸ்களிலோ கொண்டு செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி பஸ் மற்றும் ரயில்களில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடி மருந்து, எரிபொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பயணிகள் பட்டாசுகளை கொண்டு செல்ல முயற்சிப்பதில்லை. எனினும் ஒருசிலர் விதிமீறல்களில் ஈடுபட்டு விடுகிறார்கள்..

இதனால் அவர்களுக்கு மட்டுமல்லாமல், மற்ற பயணிகளுக்கும் சேர்த்தே ஆபத்து விளைகிறது. எனவே, விதியை மீறி பட்டாசு கொண்டு சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்முறையாக பட்டாசுகளுடன் பிடிபட்டால் ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து, விதி மீறல்களில் ஈடுபட்டால் 3 வருடங்கள் வரை சிறை தண்டனை அல்லது 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

Read more ; அடிக்கடி மறதி.. குடும்பத்தினர் கூட கை விட்டுட்டாங்க.. ஹாஸ்பிட்டல் கூட்டு போக கூட யாரும் வர மாட்டாங்க..!! – மனமுடைந்து பேசிய சமந்தா

English Summary

Harsh punishment for carrying firecrackers in train.. Railway police warn

Next Post

’அந்த விஷயம் எனக்கு பிடிக்கல’..!! ’வீடியோவை ரிலீஸ் பண்ணது இவர்தான்’..!! நடிகை ஓவியா பரபரப்பு குற்றச்சாட்டு..!!

Wed Oct 23 , 2024
Actress Oviya has said that it was her ex-friend Tariq who posted the obscene video.

You May Like