பாலியல் உறவு என்பது மனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் ஒரு முக்கிய தேவையாக இருக்கிறது. ஆனால், மனிதர்களை பொறுத்தவரையில் பாலியல் உறவுகள் பற்றி பேசுவதற்கு தயங்கும் இடத்தில், அதன் தேவையைப் பற்றி நாம் பேசியாக வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
உடல் உறவுகளின் தேவை ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு, விதமாக இருக்கும். ஆனால், அவை எப்படி பட்டவை என ஒரு கேள்வி இருக்கிறது. பயோடெக்னாலஜி தகவல்களுக்கான தேசிய மையம் நடத்திய ஒரு ஆய்வில் மக்கள் வெகு காலமாக உடலுறவு கொள்ளாமல் இருந்தால், அது என்ன விதமான வித்தியாசத்தை உண்டாக்கும்? என்பதை பற்றி தெரிவித்துள்ளனர்.
இங்கே குறிப்பிடப்பட்டிருக்கின்ற ஆய்வில், 17,744 பேரிடமிருந்து தரவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் 15.2 சதவீத ஆண்கள் மற்றும் 26.7% பெண்கள் உள்ளிட்டோர் ஒரு வருட காலமாக உடலுறவு கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். அதே போல, 8.7% ஆண்கள் மற்றும் 17.5% பெண்கள் 5 வருடங்களாக உடலுறவு கொள்ளாமல் இருக்கிறார்கள்.
உடலுறவுகளால், சில ஆரோக்கிய நன்மைகள் ஏற்படலாம் என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது. இதில் இரத்த அழுத்தம் கட்டுப்பாடு, மன அழுத்த அளவு குறைவாக இருக்கிறது. போன்றவையும் அடங்கும்.
ஆரோக்கியமான உடலுறவு வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு தொடுப்பட்டினி என்பது துணையின் தொடுதல் இல்லாமையை உணரத் தொடங்குகிறது. நோய் தொற்றின் போது, ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தபோது இதே போன்ற பிரச்சனைகளை மக்கள் சந்திக்க நேர்ந்தது. தனிமையில் வாழ்ந்தவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகிப் போயினர். அத்தகைய சூழ்நிலையில், மன அழுத்தம் அதிகரிக்கும்.
இது பாலினத்தோடு நேரடி தொடர்புடையதல்ல ஆனாலும் கூட, மன அழுத்தத்தின் அளவு அதிகரித்தால், உடல் குறித்த பிரச்சனையும் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், மன அழுத்தம் அதிகரித்தால், இரத்த அழுத்த பிரச்சனையும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வு முடிவில், பாலியல் உறவுகள் சரியாக இல்லாவிட்டால், உறவுகள் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அதனால் , பல திருமணங்களும் முறிந்து போய்விடுகிறது. உடலுறவுகள், உறவின் இனிமையை பாதுகாப்பதோடு, தனிப்பட்ட மகிழ்ச்சியான உணர்வும் இதில் இருக்கிறது.
அதோடு, உடல் ரீதியாக உறவை ஏற்படுத்தாமல் இருந்தால், சில சமயங்களில் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் அது பாதிக்கும். மனித தொடர்பு இல்லாததால், சில சமயங்களில், தனிமை உணர்வு உண்டாகிறது.