fbpx

உரிமைத்தொகைக்கு மேல்முறையீடு செய்துள்ளீர்களா..? இன்னும் 10 நாட்களில்..!! வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.1,000 கிடைக்காதவர்கள் தொடர்ந்து மேல்முறையீடு செய்து வருகின்றனர். இதுவரை மேல்முறையீடு செய்யப்பட்டு புதிதாக 7.35 லட்சம் பயனாளிகள் நவம்பர் மாதம் முதல் இத்திட்டத்தில் மேலும் இணைக்கப்பட்டு தற்போது மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், நிராகரிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுதாரர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இது குறித்த விசாரணைக்கு தங்களை தொடர்பு கொள்வார்கள் என்றும் மேல்முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த தகுதியானோருக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெறாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

BREAKING | தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர், முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி காலமானார்..!!

Thu Nov 23 , 2023
கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா பீவி. இவர், தோலிகட் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பை படித்தார். இந்தியாவின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையையும் பெற்றார். கேரளாவில் நீதிபதியாக பணியாற்ற பின் பெருமை மிகுந்த உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார். இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை கருணாநிதி முதல்வராக இருந்தபோது கருணாநிதியின் […]

You May Like