ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இன்று முதல் நல்ல செய்தி வீடு தேடி வரப்போகிறது. புதிய ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என்பதை நீங்களே தெரிந்து கொள்ள முடியும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. பின்னர், ஜூன் 6ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. இதனால், புதிய அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்நிலையில், நடத்தை விதிமுறைகள் கடந்த ஜூன் 6ஆம் தேதி திரும்பப் பெறப்பட்டன. இதனால் பணம், பொருட்கள் கொண்டு செல்வதில் எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. அதேபோல் அரசு புதிய திட்டங்கள் அறிவிக்கவும், புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவும் எந்த பிரச்சனையும் இல்லை.
இதேபோல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கவும், புதிய குடும்ப அட்டை தரவும் இனி எந்த கட்டுப்பாடும் இல்லை. கடந்த 2 மாதங்களாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக குடும்ப அட்டை பெற முடியாமல் தவித்து வந்தவர்கள் மற்றும் குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்ய முடியாமலும் தவித்து வந்தவர்கள் இன்று முதல் எளிதாக மாற்றங்களை செய்ய முடியும்.
சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு கடந்த ஒரு ஆண்டில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு அதிகாரப்பூர்வ வேலை நாளான திங்கள்கிழமை (இன்று) முதல் விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க இருக்கின்றனர். தமிழ்நாட்டில் பொதுமக்கள் குடும்ப அட்டைகள் பெற https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
ஒருவேளை ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாது என்றால், இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் நகல் ஸ்மார்ட் கார்டு, புதிய உறுப்பினர்களை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்ப தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்கம் போன்ற அத்தனை சேவைகளும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : குரூப் 4 தேர்வை இத்தனை லட்சம் பேர் எழுதவில்லையா..? ரிசல்ட், கவுன்சிலிங் எப்போது..? வெளியான குட் நியூஸ்..!!