மத்திய அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ள ஒரு வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது, மத்திய அரசு வெளியிட்டுள்ள அந்த வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பில், supervisor, laboratory assistant, Gr.|| Engraver, secretarial assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த பணிகளுக்கு என 11 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து இருப்பவர்கள் அரசாங்கத்தால், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் masters degree, diploma, BE, B,tech, BSc, bachelors degree போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பது மிக, மிக, அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி பணியிடங்கள் அடிப்படையில், விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 முதல், அதிகபட்சமாக 30 வயது வரையில் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு, 21,540 முதல், 95,910 ரூபாய் வரையில் வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் இணையதள தேர்வு மற்றும் திறனாய்வு தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் https://igmhyderabad.spmcil.com/wp-content/uploads/2023/09/Advt-01-2023.pdf என்ற
வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, 1 10 2023 அன்று மாலைக்குள் அனுப்பி வைத்து, பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.