fbpx

பான் கார்டு தொலைந்துவிட்டதா..? 10 நிமிடங்களில் இ-பான் கார்டை டவுன்லோடு செய்யலாம்.. எளிய வழி இதோ..

பான் கார்டு தற்போது அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது.. தற்போது பான் கார்டின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. வரி செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு வங்கி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு பயன்படுகிறது… வங்கிக் கணக்கைச் செயல்படுத்தும் போதும், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதும், பான் கார்டு எண் தேவைப்படும்.

எனினும் உங்களின் பான் கார்டு தொலைந்துவிட்டால், இப்போது பயப்பட தேவையில்லை. ஏனெனில் பான் கார்டை பெறும் செயல்முறை இப்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. பான் கார்டை பெறுவதற்காக, இனி வரிசையில் நிற்க வேண்டியதில்லை. உடனடியாக ஆன்லைனில் டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.. மேலும்10 நிமிடங்களில் பான் கார்டை பெறலாம். இதற்காக வருமான வரித்துறை ஒரு புதிய வசதியை இ-ஃபைலிங் போர்ட்டலில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆன்லைனில் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நபரின் மொபைல் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்… அவரின் பிறந்த தேதி ஆதார் அட்டையில் இருக்க வேண்டும்.. மேலும் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் தேதியில் அவர் மைனராக இருக்கக்கூடாது.

டூப்ளிகேட் பான் கார்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது..?

  • NSDL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் – https://www.protean-tinpan.com/.
  • “Changes/Correction in Existing Pan data” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும், ஒரு டோக்கன் எண் உருவாக்கப்பட்டு உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
  • “Personal Details” என்பதைக் கிளிக் செய்து, தேவையான அனைத்து தகவல்களையும் E-KYC அல்லது E-Sign மூலம் சமர்ப்பிக்கவும்.
  • உங்கள் விவரங்களைச் சரிபார்க்க, உங்கள் வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், 10ம் வகுப்பு சான்றிதழ் போன்றவற்றின் நகலை NSDL அலுவலகத்திற்கு அனுப்பவும்.
  • e-KYC க்கு, ஆதார் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ இணையதளத்தில் உள்ளிடவும்.
  • e-PAN அல்லது physical PAN.ஆகியவற்றிலிருந்து உங்களுக்குத் தேவையான விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
  • உங்கள் முகவரியை நிரப்பி பணம் செலுத்துங்கள்.
  • இந்தியாவில் வசிப்பவர்கள் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும், வெளிநாட்டில் வசிப்பவர்கள் ரூ.959 செலுத்த வேண்டும்.
  • 15 முதல் 20 நாட்களுக்குள் உங்கள் பான் கார்டைப் பெறுவீர்கள்.
  • E-PAN கார்டு 10 நிமிடங்களில் கிடைக்கும், அதன் டிஜிட்டல் நகலை நீங்கள் சேமிக்கலாம்.

உங்கள் பான் கார்டு தொலைந்து போனால் உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம், முதல் படியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள படிகள் மூலம், எந்தத் தொந்தரவும் இல்லாமல் டூப்ளிகேட் பான் கார்டுக்கு விரைவாக விண்ணப்பிக்கலாம்.

Maha

Next Post

TNPSC: தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு...!

Sat Feb 25 , 2023
தமிழகம் முழுவதும் 55,071 பேர் எழுதும் குரூப் 2, குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பிரிவில், நேர்முகத் தேர்வு கொண்ட பதவிகளான இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், நன்னடத்தை அலுவலர்கள், உதவி ஆய்வாளர்கள், சார்பதிவாளர் நிலை-2 பணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர்கள் மற்றும் குரூப்-2ஏ பிரிவில் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிக்கான நகராட்சிப் பணியாளர் ஆணையர் […]

You May Like